உள்ளூர் செய்திகள்

குளிர் பிரதேச கம்பளி ஆடு நம்மூரிலும் வளர்க்கலாம்

குளிர் பிரதேசங்களில் வளரக்கூடிய கம்பளி ஆடு, நம்மூரிலும் வளர்க்கலாம் என, கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த ஆடு வளர்க்கும் தொழிலாளி வி. மணி தெரிவித்தார். அவர் கூறியதாவது:செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பில், ஆண்டுதோறும் கணிசமான வருவாய் ஈட்ட முடிகிறது. அந்த வரிசையில், குளிர் பிரதேசங்களில் வளரக்கூடிய கம்பளி ஆடு, நம்மூரிலும் வளர்க்கலாம். சென்னையில் இருந்து, 3000 ரூபாய்க்கு, பெட்டை ஆட்டுக் குட்டியை பிடித்து வந்தேனந். அது நம்மூரின் வெப்பம் மற்றும் குளிருக்கு ஏற்றவாறு வளர்க்கிறது; ஓராண்டு நிறைவடைந்துள்ளது.இனப்பெருக்கத்திற்கு, கிடை ஆடு வாங்கிய பின், கம்பளி ஆட்டின் மூலமாக கிடைக்கும் வருவாய் குறித்து கணக்கிட முடியும்.மானாவாரி மேய்ச்சலுக்கு, கம்பளி ஆடு ஓட்டி செல்லாமல், கொட்டகையில் வளர்த்தால், வருவாய் ஈட்டலாம். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 88518 42937


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !