உள்ளூர் செய்திகள்

சீனித்துளசி

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் இனிப்புச்சுவை கொண்ட சீனித்துளசி முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆங்கிலத்தில் 'ஸ்டிவியா' என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி அல்லது சீனித்துளசி என அழைக்கப்படுகிறது. கரும்பு சர்க்கரையானது அதிகமான கலோரிகளை கொண்டுள்ளதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சர்க்கரையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். அவர்கள் கரும்பு சர்க்கரைக்கு பதிலாக இனிப்பு துளசி இலையை பயன்படுத்தலாம். இது கலோரிகளை உருவாக்காத இனிப்புச்சுவை கொண்டது. இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாக பயன்படுத்தலாம்.நன்மைகள்: ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. கலோரிகளை உருவாக்காது. உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது. நுண்ணுயிர்களை எதிர்க்கும் ஆற்றல் பெற்றுள்ளது. பக்க விளைவுகள் இல்லை. சர்க்கரை நோயாளிகள் இனிப்பு பண்டங்களில் பயன்படுத்தலாம். சீனித்துளசி இலையை தண்ணீரில் நன்றாக காய்ச்சி வடிகட்டி தேவையான அளவான 1:2 தேக்கரண்டியளவு டீ, காபியில் சேர்ந்து அருந்தினால் அசல் இனிப்புச்சுவை கிடைக்கும்.- எம்.ஞானசேகர்விவசாய ஆலோசகர், சென்னை.95662 53929


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !