உள்ளூர் செய்திகள்

உர நிர்வாகம் முறையாக கையாண்டால் வாழை சாகுபடியில் வளம் பெறலாம்

வாழை சாகுபடிக்கு உரம் நிர்வாகம் கையாளுவது குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா கூறியதாவது:நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும் பல வித பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.அந்த வரிசையில், செவ்வாழை, ரஸ்தாலி, பூவன் உள்ளிட்ட பல வித வாழைகளை, வீட்டு தோட்டம் மற்றும் விளை நிலங்களில் சாகுபடி செய்யலாம்.இந்த ரக பழ மரங்களை நடும் போது, தண்ணீர் தேங்காத மேட்டுப் பகுதிகளில், 2 அடி அகலம், 2 அடி ஆழமுள்ள பள்ளம் எடுத்து நட வேண்டும்.இந்த பள்ளத்தில், தொழு உரம், வேப்பம்புண்ணாக்கு, சாம்பல் கலவை உள்ளிட்டவை அடியுரமாக போட்டு நட வேண்டும். மூன்று மாதங்கள் கழித்து, கடல் பாசி உரத்தை மேல் உரமாக இட வேண்டும். அப்போது தான், வாழைக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து, பழங்களின் வளர்ச்சியும், அதன் பருமனும் கூடுதலாகும்.குறிப்பாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில், வாழை சாகுபடிக்கு குறைந்த ஆழமும், அகலத்திலும் பள்ளம் எடுத்து சாகுபடி செய்கின்றனர்.இது போல செய்யும்போது, பழங்களின் பருமன் குறைவாக இருக்கும். இதை தவிர்க்க, சரியான அளவு பள்ளம் மற்றும் உர நிர்வாகத்தை முறையாக கையாண்டால் தான், வாழைகளில் நல்ல மகசூல் பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: கே.சசிகலா, 72005 14168.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !