டிராக்டர் பழுது நீக்கும் இலவச பயிற்சி வகுப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே இல்லீடு கிராமத்தில் ஊரக மேம்பாட்டு மையம், தேசிய வேளாண் நிறுவனம் உள்ளது. இதை பாரத ரத்னா சி.சுப்பிரமணியன் நிறுவினார். இந்நிறுவனம் விவசாயிகள் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டிராக்டர் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (செப்.,26) மற்றும் செப்.,27 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது. முதலில் வரும் 40 பேர் முன்னுரிமை அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுவர். முன்பதிவுக்கு 96262 02756ல் தொடர்பு கொள்ளலாம்.- எம்.விஸ்வலிங்கம்இணை இயக்குனர், தேசிய வேளாண் நிறுவனம் இல்லீடு, காஞ்சிபுரம்.