உள்ளூர் செய்திகள்

கூடுதல் வருவாய்க்கு மூக்குத்தி அவரை

மூக்குத்தி அவரை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சு.ரமேஷ் கூறியதாவது: மணல் கலந்த களிமண் நிலத்தில், கீரை, வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், மூக்குத்தி அவரை சாகுபடி செய்துள்ளேன். இது, 90 நாட்களுக்குப்பின் மகசூல் கொடுக்கும். இந்த மூக்குத்தி அவரை பூ ஊதா நிறத்திலும், காய் கிராம்பு வடிவிலும் இருக்கும். இது, காய்கறி ரகங்களில் அரிதாக கிடைக்க கூடியவை. மற்ற அவரையை விட மூக்குத்தி அவரை விலை அதிகம். மூக்குத்தி அவரையில், மருத்துவ குணங்கள் அதிகமாக இருப்பதால் மக்கள் வாங்கி செல்கின்றனர். வீட்டுத் தேவைக்கு போக, விற்பனை செய்து விடுகிறேன். காயாக விற்பதை காட்டிலும், விதையாக மாற்றி கொடுப்பதில் தான் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: சு.ரமேஷ், 81109 44475.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !