உள்ளூர் செய்திகள்

மல்லி பூ செடி வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு

மல்லி பூ செடி வேர் அழுகல் நோயை கட்டுபடுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பட்டாபிராம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜி. குமார் கூறியதாவது: மல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்களை சாகுபடி செய்துள்ளேன். பூந்தோட்டத்தை பொறுத்தவரையில், தினசரி வருவாய் ஈட்டக்கூடிய பணப்பயிராகும். மல்லி பூ சாகுபடியில் வெள்ளை இலைப்பேன், வேர் அழுகல் ஆகிய நோய்களை கவனித்து, அவ்வப்போது கட்டுப்படுத்த வேண்டும். இந்த நோய் தாக்குதலை ரசாயன உரங்கள் மற்றும் இயற்கை உரங்கள் மூலமாக கட்டுப்படுத்தலாம். அதற்கு முன், செடிகளில் நோய் தாக்குதல் அறிகுறி இருக்கும் போது, மல்லி செடிகளை தோட்டத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதன் பின் ரசாயனம், இயற்கை உர கரைசலை தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், மல்லி செடிகளில் இருந்து தடை இன்றி வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: ஜி.குமார், 99528 58097.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !