உள்ளூர் செய்திகள்

நீர்வள, நிலவளம் திட்டத்தில் நுண்ணீர் பாசன மானிய விபரம்

பாசனம் என்றதுமே ஏரிப்பாசனம், ஆற்றுப்பாசனம், கிணற்றுப்பாசனம் என்ற பல்வேறு பாசன அமைப்புகளைவிட இன்றைய காலகட்டங்களில் சொட்டுநீர் பாசனமே நம் கண் முன்னே மேலோங்கி நிற்கிறது. நீரையும் நிலத்தையும் அடிப்படையாகக் கொண்ட வேளாண்மை தொழிலுக்கு இன்றைய காலகட்டத்தில் நிலத்தின் தரம் குறைந்தும் நீர் பற்றாக்குறையாகியும் வருகின்றன. நிலமில்லாது நீரில்லை என்பதுபோல் நீரில்லாது நிலமும் இல்லை. இரண்டுமே ஒன்றையொன்று சார்ந்து இருப்பதை ஒன்று இருந்து மற்றொன்று இல்லையெனில் எவ்வித பயனும் இல்லை. மண்ணின் வளம், இயற்கை மற்றும் செயற்கை உரங்கள் மூலம் பாதுகாக்கப்படுகிறது. அதேபோல் நீர்வளம் காக்கப்படவும், நீர்வளத்தினை பெருக்கவும் உரிய பணிகளை வேளாண்மை பொறியியல் துறை செயல்படுத்தி வருகிறது. வேளாண்மைக்கு அடிப்படையான நீரையும் நிலத்தையும் தவிர பிற இடுபொருள்களான நல்ல விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் களைக்கொல்லிகள் ஆகியவற்றை தேவைக்கேற்ப உற்பத்தி செய்ய முடியும். ஆனால் நீரும், நிலமும் உற்பத்தி செய்ய இயலாதவை. இவைகள் இரண்டும் இயற்கையின் கொடைகள். சேமிக்கும் பாசன நீரின் அளவு அதன் உற்பத்திக்குச் சமம். எனவே நீர்வளத்தை சிக்கனமாகவும், திறமையாகவும் பயன்படுத்துதல், பயிர் செய்யும் பாசனபரப்பு மாற்றுப்பயிர் மூலம் அதிகப்படுத்துதல், நவீன முறைகளால் உற்பத்தியையும் தரத்தையும் உயர்த்துதல் என்ற அடிப்படையில் அமைந்தது சொட்டுநீர் பாசனத்திட்டம்.1. சொட்டு நீர் பாசன திட்டத்தினை அனைத்து விவசாயிகளும் அமைக்கலாம். 2. அனைத்து விவசாயிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைப்படி சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.43,816/- கீழக்கண்ட அட்டவணையில் உள்ளவாறு வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், வருவாய் வட்டாட்சியர் (தாசில்தார்) அவர்களிடம் பெறப்பட வேண்டும்.வ.எண். - பயிர் இடைவெளி(மீ) ரூ.43,816/-க்கு அதிகபட்சம் பயன் அடையும் பரப்பளவுபரப்பு (எக்) - பரப்பு (ஏக்கர்) - சிறு விவசாயி - குறு விவசாயிஅ) அதிக இடைவெளி பயிர்கள்1. - 12 x 12 - 2.00 - 5.00 - 2.502. - 10 x 10 - 2.00 - 5.00 - 2.503. - 9 x 9 - 2.00 - 5.00 - 2.504. - 8 x 8 - 2.00 - 5.00 - 2.505. - 6 x 6 - 1.65 - 4.12 - 2.506. - 5 x 5 - 1.50 - 3.75 - 2.507. - 4 x 4 - 1.40 - 3.50 - 2.508. - 3 x 3 - 1.20 - 3.00 - 2.509. - 2.5 x 2.5 - 0.84 - 2.10 - 2.1010. - 2 x 2 - 0.70 - 1.75 - 1.75ஆ) குறைந்த இடைவெளி பயிர்கள்11. - 1.5 x 1.5 - 0.60 - 1.50 - 1.5012. - 2.5 x 0.6 - 0.80 - 2.00 - 2.0013. - 1.8 x 0.6 - 0.62 - 1.50 - 1.5014. - 1.2 x 0.6 - 0.40 - 1.00 - 1.003. விவசாயிகளின் தேவை பூர்த்தி செய்யப்பெற்ற பின்னரே நிறுவனத்திற்கு மானியத்தொகை வழங்கப்படுகிறது. 5 ஏக்கருக்கு மேல் உள்ள பெரிய விவசாயிகளுக்கு கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ள தொகையில் 75% அல்லது அங்கீகரிக்கப்பட்ட சொட்டுநீர் நிறுவனத்தின் அலகுத் தொகையில் 75% மானியமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 12.50 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும்.லேட்டர் இடைவெளி (மீட்டரில்)-0.20எக் (1/2 ஏக்கர்)-0.40எக் (1 ஏக்கர்)-1.00எக் (21/2 ஏக்கர்)-2.00எக் (5 ஏக்கர்)-3.00எக் (7 1/2 ஏக்கர்)-4.00எக் (10 ஏக்கர்)- 5.00எக் (12.50 ஏக்கர்)அ) அதிக இடைவெளி பயிர்கள்12 x 12 - 8057 - 13785 - 18820 - 29928 - 46467 - 57809 - 7361110 x 10 - 8308 - 14277 - 20041 - 32323 - 50128 - 62787 - 798319 x 9 - 8490 - 14631 - 20900 - 34039 - 52704 - 66294 - 842198 x 8 - 8673 - 15088 - 22028 - 36217 - 56087 - 70893 - 89964 6 x 6 - 9492 - 16605 - 26551 - 44387 - 71715 - 86970 - 1091295 x 5 - 10061 - 17977 - 30143 - 51438 - 74334 - 94465 - 1269254 x 4 - 11177 - 18621 - 31793 - 55725 - 86926 - 113812 - 1354593 x 3 - 12088 - 20048 - 36551 - 63629 - 97448 - 122553 - 1534412.5 x 1.5 - 14939 - 27092 - 52230 - 95083 - 145227 - 203823 - 2489542 x 2 - 18319 - 31616 - 63598 - 123441 - 179332 - 249134 - 3057971.5 x 1.5 - 21514 - 35973 - 74437 - 141858 - 211855 - 292595 - 360002தகவல்: தி.யுவராஜ் தட்சிணாமூர்த்தி, 96591 08780, பி.கிருஷ்ணமூர்த்தி, 98423 61223, உதவி பொறியாளர்கள், வேளாண்மை பொறியியல் துறை, தாராபுரம்.-கே.சத்தியபிரபா, உடுமலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !