உள்ளூர் செய்திகள்

மலை வாழை வருவாய்க்கு நாகர்கோவில் சிங்கன் வாழை

சிங்கன் வாழை சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:பாரம்பரிய ரக வாழையான மட்டி, ஏலக்கி, செவ்வாழை, நேந்திரன், காவேரி, பேயன், சர்க்கரை கேளி, ரஸ்தாலி, பூவன் ஆகிய ரக வாழை சாகுபடி செய்து வருகிறேன்.பெரும்பாலான வாழை மரங்கள், களர் உவர் நிலங்களை தவிர, பிற ரக மண்ணுக்கு நன்கு வளரும். அந்த வரிசையில், சிங்கன் வாழை சாகுபடி செய்துள்ளேன். இது, நாகர்கோவில் ரகம். ஏறக்குறைய மலை வாழை போல தோற்றம் இருக்கும். மலை வாழை பழங்கள் சற்று சிறிதாக இருக்கும். இந்த சிங்கன் வாழை, அதைவிட சற்று பெரிதாக இருக்கும்.பத்து மாதங்கள் கழித்து மகசூலுக்கு வரும். இதன் பழங்கள் சுவையுடன் இருப்பதால், சந்தையில் அதிக விலை கொடுத்தும் வாங்க மக்கள் தயக்கம் காட்டுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,72005 14168.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !