உள்ளூர் செய்திகள்

பஞ்சகவ்யா (பயிரின் உயிர்)

'வீட்டிற்கு ஒரு பசு வளர்ப்போம். ஊருக்கு ஒரு கோசாலை அமைப்போம்' என்பது சேலம் ஸ்ரீநகரம் தெற்கு அம்மாபேட்டையில் செயல்படும் 'சுரபி கோசாலை'யின் சிறப்பாகும். இதுகுறித்து சுவாமி தேஜோமயானந்தா ஆசிரமம் சுவாமி ஆத்மானந்த சரஸ்வதி கூறியதாவது: தாய்ப்பாலுக்கு அடுத்து பசுவின்பால் தான் உலகில் சிறந்தது. தாய்ப்பால் நின்றால் தாயை விற்பதில்லை. அதேபோல் பால் கறக்காத பசுவை விற்கக்கூடாது. பசுவின் பால், தயிர், நெய், சிறுநீர், சாணம் சேர்ந்தது 'பஞ்சகவ்யம்'. இது அனைத்து நோய்களுக்கும் தீர்வாக அமைந்துள்ளது. பசுவில் இருந்து பாலை மட்டுமே எதிர்பாராமல் சாணம், கோமூத்திரம் ஆகியவற்றை பயன்படுத்தி பல்வேறு பொருட்களை தயாரிக்கலாம். சுரபி கோசாலையில் காங்கேயம் பசுவின் பஞ்சகவ்யத்திலிருந்து கோமூத்ர அர்கா, பஞ்சகவ்யம் கிருதம், கோமூத்ர கனவடி, விபூதி, துாபம், பற்பொடி, கேச தைலம், மாலீஸ் ஆயில், துளசி அர்கா, ஹரடே சூரணம், நெய், டிஸ்வாஷ், விராட்டி, குளியல் சோப்பு உள்ளிட்ட எண்ணற்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது, என்றார்.பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை: 5 கிலோ பசு மாட்டு சாணம், 3 லிட்டர் கோமூத்திரம், 2 லிட்டர் பசும் பால், 500 மில்லி பசும் நெய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இவற்றுடன் மூன்று தேங்காய் இளநீர், 12 பழங்கள் அல்லது அழுகிய வாழைப்பழங்கள் சேர்க்கவும். அவற்றுடன் 2 லிட்டர் புளித்த தயிர், சிறிது சுண்ணாம்பு, கையளவு உயிர் மண், கையளவு வெல்லம் சேர்த்து கொள்ள வேண்டும். இத்திரவத்தை, வேப்பம்குச்சி ஒன்றால் நன்றாக கலக்கவும். 20 நாட்கள் வரை தினமும் திறந்து சிறிது நேரம் நன்றாக கலக்கவும். 20 நாட்களுக்கு பின் பஞ்சகவ்யா ரெடி. அதன் பின் பஞ்சகவ்யாவை 30, - 50 லிட்டர் நீரில் ஒரு லிட்டர் சேர்க்கலாம். இதை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தினால் பயிர்களுக்கு நுண்ணுாட்ட சத்துக்கள் மற்றும் உயிர் சத்துக்கள் இயற்கையாகவும், எளிமையாகவும் கிடைக்கும். நோய்க்கிருமிகளை கட்டுப்படுத்தும் காரணியாகவும் விளங்குகிறது.- சுரபி கோசாலை தெற்கு அம்மாபேட்டை, சேலம்94432 29061.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !