சின்ன சின்ன செய்திகள்
இலவங்கப்பட்டை உரிக்கும் கத்தி : நம் நாட்டின் பழமையான மணமூட்டும் பயிர்களில் இலவங்கப் பட்டையும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் கீழ்பழனி மலைப்பகுதி, கல்லார், பர்லியான், குற்றாலம், ஏற்காடு மலைப்பகுதிகளில் இலவங்கப்பட்டை பயிர் செய்யப்படுகிறது. இம்மரத்தின் பட்டைகளை உரித்து எடுப்பதற்கு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தடியன்குடிசையில் வடிவமைக்கப்பட்டது. ''பட்டை உரிக்கும் கத்தி'' இதனைக் கொண்டு முதல் தரமான மெல்லிய சிறிய குழல் வடிவில் அமைந்த பட்டைகள் ''குழல்கள்'' எனவும் பட்டையின் உட்புறம் காணப்படும் மென்மையான பகுதி 'சருகு' எனவும், முதிர்ந்த தண்டுகளில் சுரண்டப்பட்டு, ஆனால் உரிக்காமல் பெறப்பட்ட பட்டைகளைச் ''சுரண்டப்பட்ட சீவல்'' எனவும், பட்டை சுரண்டப்பட்டு வெளிப்பட்டை நீக்கப்படாமல் பெறப்பட்ட பட்டைகளை 'சுரண்டப்படாத சீவல்கள்' எனவும் தரம் பிரிக்க உதவுகிறது. மேலும் மேற்கூறிய அனைத்து இரகப்பட்டைகளிலிருந்து இலவங்கப்பட்டை தூளும் பெறப்படுகிறது. தகவல்: தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தடியன்குடிசை.கவாத்து செய்த பழமரங்களில் போட்டோ பசை பூசுதல் : பழ மரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை கவாத்து செய்வது முக்கியம். கவாத்து செய்த மரங்களை போட்டோ மிக்சர் என்ற பூசனக்கொல்லி மருந்தை பசைபோல் தயாரித்து கவாத்து செய்த இடங்களில் பூசுவதால் நோய் கிருமிகள் தாக்காமல் பழமரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.10 சதவீத போட்டோ பசை தயாரிக்க 1 கிலோ காப்பர் சல்பேட் பவுடருடன்1 கிலோ சுண்ணாம்பு பவுடரை 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து கட்டியான பசைபோல் தயாரிக்க வேண்டும். இப்பசையைக் கவாத்து செய்தவுடன் காயம்பட்ட இடங்களில் பூச வேண்டியது அவசியம்.கவனிக்க வேண்டியவை : காப்பர் சல்பேட் கலவையைச் சுண்ணாம்பு பவுடருடன் கலத்தல் அவசியம். மாற்றிக் கலக்கக் கூடாது. இக்கலவையை மண்சட்டி அல்லது மரச்சாமான் அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைத்து தான் தயாரிக்க வேண்டும். இரும்பு பாத்திரங்களில் தயாரிக்கக் கூடாது. இக்கலவை தேவைப்படும் பொழுது மட்டும் தயாரித்தல் அவசியமானது. தகவல் : மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை.நானோ துகள் தொழில்நுட்பம் : அனுபவ விவசாயி ஆ.ராஜமனோகரன், த/பெ.ஆரிச்சாமி, மாணவத்தோட்டம், பூலுவாப்பட்டி அஞ்சல், ஆலந்துறை, கோயம்புத்தூர்-641 101, மொபைல்: 90034 94705, தன்னுடைய தோட்டத்தில் தென்னை, தக்காளி, வாழை போன்ற எல்லா பயிர்களுக்கும் புரோபசர் ராஜசேகரன் விநியோகித்த நானோ தொழில்நுட்பக் கரைசலை பயன்படுத்தியுள்ளார்.வாடல்நோய் தாக்கப்பட்ட தென்னை மரத்தில் குறைந்த பட்சம் 4-5 குருத்தாவது மிஞ்சியிருக்கும் நிலையில் நானோ கரைசல் தெளிக்கப்பட்டால், நிலத்தில் இடப்பட்டால், தென்னை வாடல் நோயிலிருந்து மீட்கப்படுகிறது.நானோ தெளிப்பிற்கு பிறகு குரும்பை உதிர்வது குறைகிறது. செம்பொன் சிலந்தி தாக்குதல் தவிர்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு புரோபசர் பி.ராஜசேகரன் B.Tech., MBA., Chairman and Managing Director, Innovative Nano Bio Tech Formulations, பழைய எண்.34/1, புதிய எண்.73/1, 7வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-600 083. அலைபேசி: 93809 54559.மல்லிகை, சம்பங்கியில் மலர்கள் உற்பத்தி அதிகரிக்க 'கும்கி' தெளிப்பு சிபாரிசு செய்யப்படுகிறது. அனுபவ விவசாயி ''திரு.கா.கமலசேகர், த/பெ.காடசாமி கவுண்டர், சம்பங்கி தோட்டம், தியாகனூர் அஞ்சல், ஆத்தூர் வட்டம்-636 101. மொபைல் : 94878 61032, Manufacturer & Distributor, Crop Health Associate Corporator, Chennai 600 064. மொபைல்: 86954 53003, மற்றும் ஸ்ரீதர் அக்ரோ மார்க்கெட்டர்ஸ், திண்டுக்கல். 98421 42335 / 98421 32131. ஈரோடு அக்ரோ கார்ப்பரேஷன், 90470 07275 / 90470 17276.- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.