எருமை வளர்த்தால் ஏற்றம் காணலாம்
எருமை மாடுகளை வளர்த்தால், அதிக வருவாய் ஈட்டலாம்.இது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலைய கால்நடை உதவிப் பேராசிரியர் சபாபதி கூறியதாவது:எருமை மாடு வளர்ப்போர், முர்ரா, ஜாப்ராபாடி, நீலிராவி, சுர்தி ஆகிய இனங்களை தேர்வு செய்து வளர்க்கலாம். இது போன்ற ரகங்கள், பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி., ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில், அதிகமாக வளர்க்கப்படுகின்றன.பசும்பாலைவிட, எருமை பாலில் அதிக புதம் சத்து நிறைந்தது. மேலும், எருமை பாலில், பால்கோவா, ரசகுல்லா உள்ளிட்ட மதிப்பு கூட்டிய பால் பொருட்களை தயார் செய்து, சந்தையில் விற்பனை செய்தால், நல்ல வரவேற்பு உள்ளது. எருமை மாடுகள் நோய் எதிர்ப்பு, வறட்சி தாங்கும் தன்மை உடையதாகும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 94424 85691