மேல்சபை பா.ஜ., கொறடா நியமனம்
பெங்களூரு: மேல்சபை பா.ஜ.,வின் தலைமை கொறடாவாக, ரவிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.கர்நாடக மேல்சபையில் பா.ஜ.,வின் தலைமை கொறடாவாக இருந்தவர் எம்.எல்.சி., சலவாதி நாராயணசாமி. இவர், மேல்சபை எதிர்க்கட்சித் தலைவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இதனால் காலியாக இருந்த பதவிக்கு, மூத்த எம்.எல்.சி., ரவிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா வாழ்த்துத் தெரிவித்தனர்.காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிப் பேசுவதில் வல்லவர் என்பதால், ரவிகுமாருக்கு தலைமை கொறடா பதவி கிடைத்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.