உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  புடா வளர்ச்சி ஆணைய தலைவராக எம்.எல்.ஏ., ஆசிப் செய்ட் நியமனம்

 புடா வளர்ச்சி ஆணைய தலைவராக எம்.எல்.ஏ., ஆசிப் செய்ட் நியமனம்

பெலகாவி: 'புடா' எனும் பெலகாவி நகர வளர்ச்சி ஆணைய தலைவராக, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆசிப் செய்ட் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் பெங்களூருக்கு அடுத்தபடியாக அதிக சட்டசபை தொகுதிகளை கொண்டது பெலகாவி மாவட்டம். இங்கு, 18 தொகுதிகள் உள்ளன. கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநில எல்லையில் உள்ளதாலும், கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் சுவர்ண விதான் சவுதாவில் நடப்பதாலும், பெலகாவி என்று தனி பெயர் உள்ளது. இப்படி பல பெருமைகளை கொண்ட பெலகாவி நகர வளர்ச்சி ஆணைய தலைவராக, பெலகாவி வடக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆசிப் செய்ட்டை நியமித்து, முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஆசிப் செய்ட், பெலகாவி மாவட்ட அரசியலில் காங்கிரஸ் மூத்த தலைவராக உள்ளார். முதல்முறை எம்.எல்.ஏ.,வான அவர், அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார். அவருக்கு கிடைக்கவில்லை. அதிருப்தியில் இருந்தார். அதிருப்தியை தணிக்கும் வகையில் அவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை