உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு சிட்டி ரயில் நிலையம்: ரூ.1,000 கோடியில் மேம்படுத்த திட்டம்

பெங்களூரு சிட்டி ரயில் நிலையம்: ரூ.1,000 கோடியில் மேம்படுத்த திட்டம்

பெங்களூரு: பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தை 1,000 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த, ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையம் எதிரே, பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்திலிருந்து நாடு முழுதும் பல ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த ரயில் நிலையத்தை சராசரியாக தினமும் 1.75 லட்சம் பயணியர் பயன்படுத்துகின்றனர். இதனால் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.இத்தகைய ரயில் நிலையத்தை 1,000 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.பெங்களூரு மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து, சிட்டி ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 'நீண்ட நடை மேம்பாலம்' கட்ட ரயில்வே முடிவு செய்துள்ளது.இது தவிர ரயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவு வாயில் பகுதியான, நடைமேடை 5க்கு அருகில், 'மல்டி லெவல் கார் பார்க்கிங்' கட்டவும், ரயில் நிலையத்தின் 11 பிளாட்பாரங்களை இணைக்கும் வகையில் அகலமான நடைமேம்பாலம் அமைக்கவும் திட்டம் வகுத்துள்ளது.பயணியர் காத்திருப்பு அறையில் நவீன வசதிகள் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டங்களை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ரயில்வே நிலைய மேம்பாட்டு ஆணையத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ