உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எம்.எல்.ஏ., மீது மகளிர் ஆணையத்தில் புகார்

எம்.எல்.ஏ., மீது மகளிர் ஆணையத்தில் புகார்

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவிற்கு அழைப்பு விடுத்தும், நடிகை ராஷ்மிகா மந்தனா வரவில்லை. அவரை போன்றோருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று, மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கனிகா குற்றச்சாட்டு கூறினார். எம்.எல்.ஏ., கருத்துக்கு ராஷ்மிகா சார்ந்த, கொடவா சமூகம் எதிர்ப்பு தெரிவித்தது. நடிகைக்கு பாதுகாப்பு வழங்க கோரி, மத்திய, மாநில உள்துறை அமைச்சர்களுக்கு, கொடவா தேசிய கவுன்சில் தலைவர் நாச்சப்பா கடிதம் எழுதினார்.கோபம் அடைந்த ரவிகுமார் கனிகா, நாச்சப்பாவுக்கு வேறு வேலை இல்லை என்று கடிந்தார். இந்நிலையில் ராஷ்மிகாவை அவமதித்ததாக கூறி, ரவிகுமார் கனிகா மீது தேசிய மகளிர் ஆணையத்தில், நாச்சப்பா நேற்று புகார் செய்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை