மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
27 minutes ago
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
பெங்களூரு : 'கிரேட்டர் பெங்களூரு நிர்வாக சட்ட மசோதா - 2024' நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் சாதக, பாதகங்கள் குறித்து, பெங்களூரு எம்.எல்.ஏ.,க்களுடன், வரும் 27ம் தேதி அரசு முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.கர்நாடக சட்டசபையில், 'கிரேட்டர் பெங்களூரு நிர்வாக சட்ட மசோதா - 2024'ஐ, துணை முதல்வர் சிவகுமார் நேற்று தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அசோக், பா.ஜ., உறுப்பினர்கள் சுரேஷ்குமார், அஸ்வத் நாராயணா எதிர்ப்புத் தெரிவித்தனர்.அப்போது நடந்த விவாதம்:துணை முதல்வர்: நான் கிராமத்தில் பிறந்திருக்கலாம். ஆனால், 5 வயது முதல், பெங்களூரிலேயே வசிக்கிறேன். இங்குள்ள சூழ்நிலையை அறிவேன். அரசியல் ரீதியாக வேறு தொகுதியின் பிரதிநிதியாக இருக்கிறேன். எனக்கும் பெங்களூரு மீது அக்கறை உள்ளது.அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, லண்டன் நகரம் போன்று உருவாக்க வேண்டும் என்றனர். இதை நான் ஏற்கவில்லை. தற்போது உள்ள நடைமுறையை முழுமையாக மாற்ற முடியவில்லை. எனவே நடைமுறையில் சிறிதளவு மாற்றுவதற்கு முயற்சிக்கிறோம்.இந்த விஷயத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்து கேட்காமல், தீர்மானம் செய்வதற்கு நான் முட்டாள் அல்ல. இம்மாதம் 22ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தின் போதும், பெங்களூரின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களிடமும் ஆலோசனை நடத்தி, முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. 1.50 கோடி மக்கள்
பெங்களூரு நகர வளர்ச்சிக்காக தேவையான முடிவை எடுப்போம். எதிர்க்கட்சியினர் வேண்டாம் என்றால், நாங்கள் 'கிரேட்டர் பெங்களூரு' பணியில் ஈடுபட மாட்டோம். சட்டசபையில் விவாதித்து முடிவு செய்வோம். சட்ட மசோதாவில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் படித்து அனைவரும் தங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்.பெங்களூரு நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. வெளி நகரங்களில் இருந்து, அதிக எண்ணிக்கையில் மக்கள் வருகின்றனர். இதற்கு முன்பு, நான் நகர வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தபோது, 70 லட்சம் பேர் இருந்தனர். தற்போது, 1.50 கோடிக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி உள்ளது. குடிநீர் வசதி செய்ய வேண்டும். குப்பை பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். வளர்ச்சி, பொருளாதார நலன் கருதி, கிரேட்டர் பெங்களூரு நிர்வாக சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாதக, பாதகங்களை ஆராய்ந்து முடிவு செய்யலாம். 27ல் ஆலோசனை
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இதற்கு முன்பு டில்லி வந்து கொண்டிருந்த சர்வதேச தலைவர்கள், தற்போது பெங்களூரு வந்து, பின்னர் மற்ற நகரங்களுக்குச் செல்வதாக தெரிவித்தார்.இந்த வகையில் யாரும் பயப்பட வேண்டாம். நகரை எப்படி மாற்றலாம் என்று கூறுங்கள்.எதிர்க்கட்சித் தலைவர் அசோக்: வரும் 27ம் தேதி, அரசு அழைத்துள்ள ஆலோசனை கூட்டத்தின்போது, இது பற்றி பேசலாம்.துணை முதல்வர்: அன்றைய தினம் கிரேட்டர் பெங்களூரு குறித்து ஆலோசனை நடத்தலாம்.இவ்வாறு விவாதம் நடந்தது.
27 minutes ago
6 hour(s) ago | 5