மேலும் செய்திகள்
வெல்லத்திலும் ரசாயனம் உணவு துறை கண்டுபிடிப்பு
05-Mar-2025
பெங்களூரு: ஹோலி பண்டிகை, வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசி விளையாடுவர். வாடிக்கையாளர்களை கவர, மார்க்கெட்டில் பல வண்ண பொடிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த பொடிகளில் ரசாயனம் கலந்திருக்கும். இதை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால், ரசாயன வண்ண பொடிகள் பயன்படுத்துவது, சருமத்தை மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அரிப்பு, எரிச்சல் ஏற்படலாம். இத்தகைய பொடிகளை விற்பதை தடுக்கும்படி, அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.ஹோலி பண்டிகையை முன்னிட்டு, விதவிதமான வண்ண மயமான இனிப்பு தின்பண்டங்கள் விற்கப்படும். இனிப்புகளில் உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். இதை கண்காணிக்க வேண்டுமென, உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பண்டிகை நாளன்று பன்னீர், கோவா, நெய் உட்பட, பால் பொருட்களின் தேவை அதிகம் இருக்கும். இவற்றிலும் கலப்படம் இருக்கலாம். எனவே உஷாராக இருக்க வேண்டும். வரும் 15ம் தேதி வரை, சிறப்பு விழிப்புணர்வு தேவை. உணவு மாதிரிகளை சேகரித்து, அந்தந்த பகுதிகளின் ஆய்வகத்தில் தரத்தை சோதிக்கும்படி, உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
05-Mar-2025