மேலும் செய்திகள்
ஆவின் ஊக்கத்தொகையை நேரடியாக வழங்க எதிர்ப்பு
22-Feb-2025
பெங்களூரு:''பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய 650 கோடி ரூபாய் ஊக்கத்தொகை நிலுவையில் உள்ளது. இவர்கள், 10 ரூபாய் ஊக்கத்தொகை கேட்கின்றனர். எனவே, பால் விலை உயர்வு குறித்து முதல்வரிடம் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்,'' என, மாநில கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷ் தெரிவித்தார்.கர்நாடக மேல்சபையில் பா.ஜ., உறுப்பினர் முலே, காங்கிரஸ் உறுப்பினர் உமாஸ்ரீ ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்து, அமைச்சர் வெங்கடேஷ் கூறியதாவது:கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு, 2023 - 24ல் தினமும், 82.93 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வந்தது. 2024 - 25ல், 90 முதல் 95 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் பால் கொள்முதல் அதிகரித்து வருகிறது.இதற்காக பால் உற்பத்தியாளக்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதும் அதிகரித்து வருகிறது. தற்போது ஊக்கத்தொகையாக, ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் கேட்கின்றனர்.பால் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊக்கத்தொகை, பாலின் விலையை உயர்த்துவது தொடர்பாக, முதல்வருடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்.கே.எம்.எப்., சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டருக்கு ஐந்து ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2023 ஏப்ரல் முதல் 2025 பிப்ரவரி இறுதி வரை, 2661.70 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.தவிர 9.45 லட்சம் பால் உற்பத்தியாளக்களுக்கு இன்னும் 656 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இது நிதித்துறை கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன், பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
22-Feb-2025