உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஈ.டி.,யிடமிருந்து நோட்டீஸ் வரும் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி காத்திருப்பு

 ஈ.டி.,யிடமிருந்து நோட்டீஸ் வரும் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி காத்திருப்பு

பெங்களூரு: ''எந்த வினாடியிலும் எனக்கு, ஈ.டி.,யிடம் இருந்து, எனக்கு நோட்டீஸ் வரக்கூடும்,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார். இது குறித்து, பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: அடுத்த முறையும், தானே முதல்வராவதாக சிவகுமார் கூறுகிறார். அடுத்த தேர்தலில், அவர் மூலமாகவே கட்சி ஆட்சிக்கு வரட்டும்; அவரே முதல்வராகட்டும். எனக்கு அவசரமில்லை. எனக்கும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு நல்லுறவு உள்ளது. எந்த மனக்கசப்பும் இல்லை. அவசியம் ஏற்பட்டால் சந்திப்போம். என் வீட்டில் ஈ.டி., எனும் அமலாக்கத்துறை சோதனை நடந்த பின், அவரது மகன் யதீந்திரா, என்னை சந்தித்து தைரியம் கூறினார். பெங்களூரில் சமீபத்தில் நடந்தது, அஹிந்தா மாநாடு அல்ல. அது, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான நிகழ்ச்சி. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், என்னை அழைக்காததால், நான் செல்லவில்லை. எந்த வினாடியிலும் எனக்கு, ஈ.டி.,யிடம் இருந்து, நோட்டீஸ் வரக்கூடும். வெளிநாட்டில் நாங்கள் முதலீடு செய்துள்ளோமா, இல்லையா என்பதை ஊடகத்தினர் முன்னிலையில் கூற மாட்டேன். ஏதோ கமிஷன் விஷயமாக சோதனை நடந்ததா அல்லது வேறு விஷயத்துக்காகவே என்பதை, அங்கு நான் கூறுவேன். அரசியல் நோக்கில் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த, 14 ஆண்டுகளாக, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இல்லங்களில், ஒரு முறை கூட சோதனை நடத்தப்படவில்லை. அரசின் கருவூலம் காலியாக உள்ளது என, நிதித்துறை கூறவில்லை. பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோ, அவைகளுக்கு மட்டும் நிதி இருப்பு உள்ளது. என, கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ