உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடகாவில் டாட்டூவுக்கு தடை? சுகாதாரத்துறை ஆலோசனை

கர்நாடகாவில் டாட்டூவுக்கு தடை? சுகாதாரத்துறை ஆலோசனை

பெங்களூரு: ஹெச்.ஐ.வி., பரவும் அபாயம் உள்ளதால், டாட்டூவுக்கு தடை விதிக்க கர்நாடக சுகாதாரத்துறை தீவிரமாக ஆலோசிக்கிறது.இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி, வயதானவர்களும் தங்கள் உடலில் விதவிதமான டாட்டூ போட்டுக் கொள்வது, இன்றைய நாட்களில் பேஷனாகிவிட்டது.பூக்கள், பிடித்த நடிகர், நடிகையர், விளையாட்டு வீரர்கள், பெயர்கள், விலங்குகள் என, பல்வேறு டாட்டூக்களை போட்டுக் கொள்கின்றனர்.டாட்டூ போடும் நபர்கள், தாங்கள் பயன்படுத்தும் ஊசிகளை சுத்தம் செய்வதில்லை. ஒருவருக்கு டாட்டூ போட பயன்படுத்திய அதே ஊசியை, மற்றவருக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.இதனால் அலர்ஜி, புற்றுநோய், ஹெச்.ஐ.வி., உள்ளிட்ட அபாயகரமான நோய்கள் பரவுவது அதிகரிப்பது தெரிய வந்தது.இது தொடர்பாக, சுகாதாரத்துறை ஆய்வு செய்தபோது, நோய் பரவ டாட்டூவும் ஒரு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து டாட்டூவுக்கு தடை விதிக்க, மாநில சுகாதாரத்துறை ஆலோசிக்கிறது.டாட்டூ தொடர்பாக, நாட்டில் எந்த கட்டுப்பாட்டு சட்டங்களும் இல்லை. முதன் முறையாக கர்நாடக அரசு, டாட்டூவுக்கு புதிய நடத்தை விதிகள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.டாட்டூ போட்டுக் கொள்வோர், கட்டாயமாக டாக்டரிடம் பரிசோதனை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். டாட்டூ போடும் நபர்கள், தாங்கள் பயன்படுத்தும் ரசாயனம், ஊசி, துாய்மை ஆகியவை குறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட பல விதிகளை வகுக்க அரசு தயாராகிறது.இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:டாட்டூவால் ஹெச்.ஐ.வி., சரும புற்றுநோய் உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் உள்ளது. சுகாதாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில், மத்திய அரசு விதிமுறை வகுக்கலாம். இதுகுறித்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவோம்.ஹெச்.ஐ.வி., தொற்று ஏற்பட்டுள்ள நபருக்கு பயன்படுத்திய ஊசியை, மற்றொருவருக்கு பயன்படுத்துவதால், அவருக்கும் ஹெச்.ஐ.வி., பரவும் அபாயம் உள்ளது.டாட்டூ போட ஒரே ஊசி பயன்படுத்துவதாலும், ரசாயனம் உபயோகிப்பதாலும் நோய் ஒருவரிடம் இருந்து, மற்றவருக்கு பரவும் வாய்ப்பு அதிகம்.மக்களின் நலனை கருதி, டாட்டூவுக்கு தடை விதிக்க சுகாதாரத்துறை ஆலோசிக்கிறது. ஒருவேளை தடை செய்யப்பட்டால், நாட்டிலேயே டாட்டூ தடை செய்த முதல் மாநிலம் என, பெயர் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ