உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சட்டசபை கூட்டத்தில் என்ன செய்வது?

சட்டசபை கூட்டத்தில் என்ன செய்வது?

பெங்களூரு: சட்டசபை கூட்டம் துவங்கவுள்ளதால், இதில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடக்கிறது.கர்நாடக சட்டசபை கூட்டம் நாளை துவங்கவுள்ளது. இதற்காக காங்கிரஸ், பா.ஜ.,வை போன்று, ம.ஜ.த.,வும் தயாராகிறது. சட்டசபை, மேல்சபையில் குறிப்பிட வேண்டிய விஷயங்கள் குறித்து, ஆலோசனை நடத்த ம.ஜ.த., -- எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடக்கிறது.ம.ஜ.த., மாநிலத் தலைவரும், மத்திய கனரக தொழிற்துறை அமைச்சருமான குமாரசாமி தலைமையில், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல் முன்னேற்பாடுகள், கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்க, தலைவர்கள் கூட்டம் இன்று காலை 11:30 மணிக்கு, பெங்களூரின் தனியார் ஹோட்டலில் நடக்கிறது. இதில் ம.ஜ.த., - எம்.எல்.ஏ..,க்கள், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் உட்பட கட்சி தலைவர்கள் பங்கேற்பர். மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்கு தயாராவது, அரசுக்கு எதிரான போராட்டம் ஆகியவை குறித்தும் ஆலோசனை நடக்கும்.இன்று மாலை 6:00 மணிக்கு, தனியார் ஹோட்டலில் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது. மத்திய அமைச்சர் குமாரசாமி, எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மாநில அரசின் வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம், மைசூரின் போலீஸ் நிலையம் மீது கல் வீச்சு, சட்டம் - ஒழுங்கு பாதிப்பு, மின்சார பிரச்னை, மெட்ரோ ரயில், பஸ் பயண கட்டணம் உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, குடிநீர் பிரச்னை உட்பட முக்கியமான பிரச்னைகள் குறித்து சட்டசபை, மேல்சபையில் உள்ளேயும், வெளியிலும் போராட்டம் நடப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.கூட்டணி கட்சியான பா.ஜ.,வுடன் இணைந்து, போராட்டம் நடத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை