உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சட்ட விரோதமாக தங்கியிருந்த 10 வங்கதேசத்தினர் நாடு கடத்தல்

சட்ட விரோதமாக தங்கியிருந்த 10 வங்கதேசத்தினர் நாடு கடத்தல்

உடுப்பி: இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த, 10 வங்கதேசத்தினர் தண்டனை காலம் முடிந்ததால், அவர்களை மேற்குவங்க மாநிலத்தின் மால்டாவுக்கு, கர்நாடகா போலீசார் அழைத்து சென்றனர். உடுப்பி மாவட்டம், மால்பே போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வடபண்டேஸ்வர் பஸ் நிலையம் அருகில், சந்தேகத்திற்கிடமாக 10 பேர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, 2024 அக்., 11ம் தேதி, அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. அவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லாததால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, உள்ளூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், 10 பேருக்கும், தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. உடுப்பி மாவட்டம் சிறை, ஷிவமொக்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 10 பேரும், அக்., 10ல் தண்டனை காலத்தை முடித்தனர். இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பெங்களூரில் உள்ள வெளிநாட்டினர் மண்டல பிரிவு அலுவலகம் பிறப்பித்த உத்தரவின்படி, மாவட்ட எஸ்.பி., ஹரிராம் சங்கர் மேற்பார்வையில், மால்பே போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராமசந்திர நாயக் தலைமையில், நவ., 23ம் தேதி உடுப்பியில் இருந்து, மேற்குவங்கத்தின் மால்டா நகருக்கு ரயிலில் புறப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ