மேலும் செய்திகள்
போடி பக்தர் சதுரகிரியில் உயிரிழப்பு
26-Jul-2025
ராமானுஜர் செய்த புரட்சி!
11-Aug-2025
பெங்களூரு: கர்நாடகாவில் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 1,004 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார். மேல்சபையில், தென்மேற்கு பட்டதாரி தொகுதியின் பா.ஜ., உறுப்பினர் டாக்டர் தனஞ்செய சர்ஜி, கர்நாடகாவில் இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்துள்ளது பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியது: கர்நாடகாவில் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 1,004 பேர் உயிரிழந்தனர். அதேபோல, ஜெயதேவா இதய மருத்துவமனையில் 61,299 பேர் மாரடைப்புக்கு சிகிச்சை பெற்றனர். இவர்களில் 45 வயதுக்கு உட்பட்ட 472 பேருக்கு, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம், உடல் பருமன், ரத்த அழுத்தம், நீரிழிவு, காற்று மாசுபாடு, உடற்பயிற்சி செய்யாதது, வாழ்க்கை முறை, உணவு முறை உள்ளிட்டவை மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம். மருத்துவ கல்வி அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல்: இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள து என்பது, தவறான தகவல். தற் போதைய மாரடைப்பு மரணங்களை, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் ஒரே எண்ணிக்கையில் தான் உள்ளன. தேவையின்றி யாரும் பீதி அடைய வேண்டாம். கொரோனா தடுப்பூசிக்கும், மாரடைப்புக்கும் சம்பந்தம் இல்லை. இளைஞர்கள் மேற்கத்திய உணவு முறையை பின்பற்றுவதை நிறுத்து வது நல்லது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
26-Jul-2025
11-Aug-2025