உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பி.எம்.டி.சி.,க்கு புதிதாக 148 மின்சார பஸ்கள்

பி.எம்.டி.சி.,க்கு புதிதாக 148 மின்சார பஸ்கள்

பெங்களூரு: பி.எம்.டி.சி.,யில் புதிதாக இணைக்கப்பட்ட 148 மின்சார பஸ்களை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையத்தில் புதிய பஸ்களின் சேவையை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பஸ்களுக்கு ஓட்டுநர்களை தனியார் நிறுவனம் மூலமாகவும், நடத்துநர்களை பி.எம்.டி.சி.,யும் நியமித்துள்ளன. பெங்களூரில் உள்ள 30 வழித்தடங்களில் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அனைத்து பஸ்களும் ஜெயநகர் பஸ் நிலையத்திலிருந்தே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.நேற்று இணைக்கப்பட்ட புதிய மின்சார பஸ்களால், பி.எம்.டி.சி.,யில் இருக்கும் மொத்த பஸ்களின் எண்ணிக்கை 6,900லிருந்து 7,048 ஆக உயர்ந்துள்ளது.இந்த பஸ்சை ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ., வரை செல்லும். 35 இருக்கைகள் உள்ளன. உட்புறத்தில் 3 கண்காணிப்பு கேமராக்களும், பின்புறத்தில் ஒரு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன.பஸ் நிறுத்தங்களை எளிதில் அறிய எல்.இ.டி., அறிவிப்புப் பலகை, குரல்வழி அறிவிப்பு கருவி, பத்து அவசர பட்டன்கள், மாற்றுத்திறனாளிகள் பஸ் ஏறுவதை சுலபமாக்கும் வகையில் தனிவசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை