உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரில் 1,600 கி.மீ.,க்கு ஒயிட் டாப்பிங் சாலை

பெங்களூரில் 1,600 கி.மீ.,க்கு ஒயிட் டாப்பிங் சாலை

பெங்களூரு; ''பெங்களூரில் சாலைகள் தரத்தை மேம்படுத்த 1,600 கி.மீ., துாரத்திற்கு ஒயிட் டாப்பிங் சாலை அமைக்க உள்ளோம்,'' என, துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.பெங்களூரில் தார்சாலைகளுக்கு பதிலாக ஒயிட் டாப்பிங் எனும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.நகரின் மஹாலட்சுமி லே - அவுட், யஷ்வந்த்பூர் தொகுதிகளில் 10 இடங்களில் ஒயிட் டாப்பிங் சாலை அமைக்கும் பணிகளை, துணை முதல்வர் சிவகுமார் நேற்று துவக்கிவைத்தார்.பின், அவர் அளித்த பேட்டி:நகரில் 10 இடங்களில் ஒயிட் டாப்பிங் சாலை அமைக்கும் பணிகளை துவக்கிவைத்துள்ளேன். சாலைகள் தரத்தை மேம்படுத்தும் வகையில் நகரில் 1,600 கி.மீ., துாரத்திற்கு ஒயிட் டாப்பிங் சாலை அமைக்க திட்டமிட்ட உள்ளோம்.முன்னதாக 196 கி.மீ., துாரத்திற்கு பணிகளை மேற்கொண்டோம். தற்போது 450 கி.மீ., துாரத்திற்கு பணிகள் நடக்கின்றன. பணிகளை ஒப்பந்தாரர்கள் சரியாக மேற்கொள்ள வேண்டும்.'பிராண்ட் பெங்களூரு' திட்டத்தின் கீழ், சாலைகளை மேம்படுத்த முதல்வர் பட்ஜெட்டில் 6,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். நகரில் நான்கில் மூன்று பகுதியில் ஒயிட் டாப்பிங் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.இதுபோன்ற சாலைகள் 30 ஆண்டுகள் நீடிக்கும். பணிகள் தரமாக நடக்கின்றன. நானே ஆய்வு செய்கிறேன். பணிகள் தரத்தை சரிபார்க்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.பெங்களூரு போக்குவரத்து இணை கமிஷனருடன் நான் பேசி உள்ளேன். நல்ல நிலையில் இல்லாத சாலை குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிந்தால், மாநகராட்சி கமிஷனரிடம் கூறும்படி கேட்டுக் கொண்டேன்.சாலை மோசமாக இருப்பது பற்றி அதிகாரிகள், எம்.எல்.ஏ.,க்கள் கவனத்திற்கு வராமல் இருக்கலாம். மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க உலக வங்கியிடம் இருந்து 2,000 கோடி ரூபாய் உதவியை நாங்கள் பெறுகிறோம்.நகரில் குப்பை பிரச்னையை நாங்கள் திறம்பட கையாண்டு வருகிறோம். யார் விமர்சித்தாலும் கவலை இல்லை. வேலை சிறப்பாக இருந்தால், விமர்சனம் இறந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ