உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கன்டெய்னர் லாரி கவிழ்ந்து  2 தொழிலாளிகள் பலி

கன்டெய்னர் லாரி கவிழ்ந்து  2 தொழிலாளிகள் பலி

ஆனேக்கல்: சாலையோர பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில், இரண்டு தொழிலாளிகள் உயிரிழந்தனர். பெங்களூரு எலஹங்காவில் ஜே.டி., என்டர்பிரைசஸ் தனியார் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் பூமிக்கு அடியில் கேபிள்களை பதிக்கும் வேலை செய்கிறது. நேற்று காலையில் எலஹங்காவில் இருந்து நிறுவனத்திற்கு சொந்தமான லாரியில், டிரைவர், ஐந்து தொழிலாளர்கள், ஆனேக்கல் அருகே சித்தயனதொட்டி கிராமத்தில் பூமிக்கு அடியில் கேபிள் பதிக்க சென்றனர். சித்தயனதொட்டி கிராம பகுதியில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரிக்கு அடியில் இரு தொழிலாளிகள் சிக்கி இறந்தனர். டிரைவர் உட்பட நான்கு பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு கிரேன் வரவழைக்கப்பட்டு, கவிழ்ந்த லாரி துாக்கப்பட்டது. லாரியில் அடியில் சிக்கிய தொழிலாளர்கள் உடல் முற்றிலும் சிதைந்து காணப்பட்டது. ஆனேக்கல் போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தவர்கள், ஆந்திராவின் ஸ்ரீமன், 25, ஜார்க்கண்டின் சீனிவாஸ், 28, என்பது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !