உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போக்சோ வழக்கு 20 ஆண்டு சிறை

போக்சோ வழக்கு 20 ஆண்டு சிறை

தாவணகெரே: சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு அளித்தது. தாவணகெரே மாவட்டத்தை சேர்ந்தவர் வசந்த், 26. இவர், 2023ம் ஆண்டு 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததால், 'போக்சோ' வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு விசாரணை, இரண்டு ஆண்டுகளாக, தாவணகெரே கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணையில் வசந்த், குற்றவாளி என நிரூபணமானது. இதையடுத்து, அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 35,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீராம் நாராயண ஹெக்டே தீர்ப்பு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ