ஹாசனாம்பா உற்சவத்துக்கு 2,500 சிறப்பு பஸ்கள்
ஹாசன் : ஹாசனாம்பா உற்சவத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக, 2,500 கூடுதல் பஸ்கள் இயக்க கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது. கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்ட அறிக்கை: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், இன்று திறக்கப்படுகிறது. வரும், 23ம் தேதி வரை மட்டுமே திறந்திருக்கும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, தரிசனத்துக்கு அனுமதி இருப்பதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஹாசனுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். வெளி மாவட்டங்களில் இருந்தும் வரக்கூடும். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், பஸ்களில் பயணியர் நெருக்கடி ஏற்படும். இதை கருத்தில் கொண்டு, 2,500 கூடுதல் பஸ்களை இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., முன்வந்துள்ளது. இம்முறை 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர், ஹாசனாம்பாவை தரிசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு உட்பட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஹாசனுக்கு சிறப்பு பஸ்கள் இயங்கும். பயணியர் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களை பயன்படுத்த வேண்டும். இந்த வசதி ஹாசனாம்பா உற்சவம் முடியும் வரை இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.