மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
யாத்கிர்: பள்ளி கழிப்பறையில் 9ம் வகுப்பு மாணவி கர்ப்பத்துக்கு காரணமான 28 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாத்கிர் மாவட்டம், ஷாஹாபூரில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பள்ளி கழிப்பறையில் பிரசவம் நடந்து, ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சிறுமியை ஷாஹாபூர் மருத்துவமனையில் பள்ளி நிர்வாகத்தினர் அனுமதித்தனர். குழந்தை, சிறுமி இருவரும் நலமுடன் உள்ளனர். இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் வெளியில் தெரிவிக்கவில்லை. ஆனால், சிறுமிக்கு குழந்தை பிறந்த விஷயம், கடந்த வியாழக்கிழமை கர்நாடக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்கு தெரிய வந்தது. ஆணைய உறுப்பினர் சசிதர் கோசாம்பே அறிவுறுத்தலின் பேரில் ஷாஹாபூர் போலீசார், போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். முதல்கட்ட விசாரணையில் சிறுமியின் வயது 17 எனவும், 28 வயதான நபரால், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது. சிறுமி பிரசவம் குறித்து தகவல் அளிக்காத வார்டன் கீதா, பள்ளி முதல்வர் பாசம்மா, அறிவியல் ஆசிரியர் நரசிம்மமூர்த்தி, விளையாட்டு ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோரை கர்நாடக உண்டு உறைவிடப்பள்ளி கல்வி நிறுவனங்கள் சங்கம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளது. சிறுமியின் சகோதரர் மீதும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. நேற்று இரவு சிறுமியை கர்ப்பமாக்கிய 28 வயது வாலிபர், கைது செய்யப்பட்டுள்ளார்.ஆனால், அவரது பெயர் விபரங்கள் தெரிவிக்கவில்லை.
16-Aug-2025