உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பஸ் உரிமையாளரை கொன்ற 3 பேர் கைது

பஸ் உரிமையாளரை கொன்ற 3 பேர் கைது

உடுப்பி : தனியார் பஸ் உரிமையாளர் சைபுதீனை கொன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். உடுப்பியில் ஏ.கே.எம்.எஸ். என்ற தனியார் பஸ் உரிமையாளர் சைபுதீன். நேற்று முன்தினம் காடவூரில் தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த மல்பே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. சைபதீனை கொன்ற வழக்கில் அப்துல் ஷுக்கர், 43, முகம்மது ஷெரீப், 37, பைசல் கான், 27, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சைபுதீன், அப்துல் ஷுக்கர், முகம்மது ஷெரீப், பைசல் கான் உட்பட ஐந்து பேர், கடந்த 2020ல் மல்பேயில் நடந்த பார் உரிமையாளர் வசிஷ்ட சத்யநாராயணா கொலை வழக்கில் தொடர்பு உடையவர்கள். இவ்வழக்கில் முகம்மது ஷெரீப் உட்பட இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான நிதியுதவி வழங்குவதாக சைபுதீன் உறுதி அளித்திருந்தார். ஆனால், அவர் கூறியபடி நடந்து கொள்ளவில்லை என்பது தெரிந்தது. இதனால் கோபம் அடைந்த முகம்மது ஷெரீப், அப்துல் ஷுக்கர், பைசல் கான் ஆகியோர் சைபுதீனை கொல்ல திட்டமிட்டனர். அதன்படி, சம்பவ தினத்தன்று ஒரே காரில் சைபுதீன் உட்பட நான்கு பேரும் கடாவூருக்கு சென்றனர். கடாவூரில் சைபுதீன் தனது வீட்டின் கதவை திறந்தவுடன், மூவரும் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட சைபுதீன் மீது 18 குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை