உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போலி ஆவணம் உருவாக்கிய 3 நகராட்சி அதிகாரிகள் கைது

போலி ஆவணம் உருவாக்கிய 3 நகராட்சி அதிகாரிகள் கைது

யாத்கிர்: போலி ஆவணங்களை உருவாக்கி, சட்டவிரோதமாக நிலத்தை பதிவு செய்த மூன்று நகராட்சி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.யாத்கிர் நகராட்சி வருவாய் ஆய்வாளர் மனப்பா படிகர், வருவாய் ஆய்வாளர் பொறுப்பு வகித்த மைனவுதீன் முகமது ஹஸ்ரத், ஷஹாப்பூர் நகராட்சியின் நீர் வழங்கல் துறையின் மேற்பார்வையாளர் ஹனுமந்தப்பா அஷ்னல் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் யாத்கிர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.ஞாயிற்றுக் கிழமை என்பதால், அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதனால், அருகில் இருந்த காவலாளியை மிரட்டி அலுவலகத்தின் சாவியை வாங்கி திறந்து உள்ளே சென்றனர்.அப்போது, யாத்கிர் எல்லை பகுதியில் உள்ள சர்வே எண் 151 எண் பிளாட் நம்பர் 42ஐ, போலி ஆவணங்களை உருவாக்கி சட்டவிரோதமாக மல்லம்மா ராமண்ணா என்பவர் பெயருக்கு பதிவு செய்தனர். இதை யாரும் கவனிக்கவில்லை என நினைத்துவிட்டுச் சென்றனர்.இந்த அனைத்து செயல்களையும் பார்த்த யாரோ ஒருவர், நகராட்சி கமிஷனர் உமேஷ் சாவனிடம் கூறி உள்ளார். இதை கேட்ட அவர், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். இதையடுத்து, யாத்கிர் டவுன் போலீஸ் நிலையத்தில் மூன்று பேர் மீதும் கமிஷனர் புகார் செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில், மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை