உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  லாரி மீது கார் மோதி 3 பேர் பரிதாப பலி

 லாரி மீது கார் மோதி 3 பேர் பரிதாப பலி

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகாவின், கொட்டகேஹாரா கிராமத்தின் அருகே, நேற்று அதிகாலை 1:30 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. வேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில், காஸ் சிலிண்டர் ஏற்றப்பட்ட லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில், கார் நொறுங்கியது. இதில் பயணித்த குருகிரண், 28, மோகன், 30, ஞானேஷ், 28, ஆகியோர் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். பிரேம் குமார், ஹிருதிக் ஆகிய இருவர் காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த பனகல் போலீசார், அப்பகுதியினர் உதவியுடன், மூவரின் உடல்களை மீட்டனர். காயமடைந்த இருவரை மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் துமகூரை சேர்ந்தவர்கள் என்பதும், தர்மஸ்தலாவுக்கு சென்றபோது விபத்து நடந்ததும் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை