தடுப்பணையில் மூழ்கி 3 இளம்பெண்கள் பலி
ராம்நகர் : தடுப்பணையில் மூழ்கி, பெங்களூரின் மூன்று இளம்பெண்கள் பலியாகினர். ராம்நகரின் மாகடி தாலுகா ஒய்.ஜி.குட்டா கிராமத்தில் உள்ள தடுப்பணைக்கு நேற்று மதியம் ஒரு குடும்பத்தின் 10 பேர் சென்றனர். தடுப்பணையின் நீர்த்தேக்கத்தில் குளித்தனர். அப்போது மூன்று இளம்பெண்கள், ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்' என்று கூச்சலிட்டனர். தத்தளித்த மூன்று பெண்களும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். தகவல் அறிந்த மாகடி போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு சென்று இளம்பெண்கள் உடல்களை மீட்டனர். உயிரிழந்தவர்கள் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியின் பார்கவி, 22, ரம்யா, 20, மது, 25 என்பது தெரிந்தது. இவர்கள் ஒய்.ஜி.குட்டா கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்ததும், தடுப்பணையை சுற்றி பார்க்க சென்ற போது, குளிக்க ஆசைப்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்ததும் தெரியவந்து உள்ளது.