உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  லாரி மீது கார் மோதி 3 வாலிபர்கள் பலி 

 லாரி மீது கார் மோதி 3 வாலிபர்கள் பலி 

ராம்நகர்: லாரி மீது கார் மோதிய விபத்தில், மூன்று வாலிபர்கள் உடல்நசுங்கி இறந்தனர். பெங்களூரு ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர்கள் சையது பாஷா, 22, யூசுப், 22, அசார் பாஷா, 22. நண்பர்களான மூன்று பேரும் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு காரில் ஜாலி ரைடு புறப்பட்டனர். பெங்களூரு - கனகபுரா சாலையில் ககலிபுரா பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற லாரியின் பின்பக்கம் மோதியது. மோதிய வேகத்தில் கார் உருக்குலைந்தது. இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் உடல்நசுங்கி இறந்தனர். அதிவேகமாக காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ