உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  34 விமானங்கள் பெங்களூரில் ரத்து

 34 விமானங்கள் பெங்களூரில் ரத்து

பெங்களூரு: போர் பதற்றம் எதிரொலியாக, பெங்களூரு விமான நிலையத்தில் 34 சர்வதேச விமானங்கள் நேற்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானை தாக்கி வருகின்றன. ஈரானும் பதிலுக்கு குவைத், கத்தார், சவுதி அரேபியா நாடுகளில் உள்ள அமெரிக்க போர் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவுகிறது. துபாய் உள்ளிட்ட பல நகரங்களில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன. அவ்வகையில், பெங்களூரில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்பட இருந்த 18 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. அதுபோல, அபுதாபி, ரியாத், தோஹா உள்ளிட்ட நகரங்களில் இருந்து பெங்களூருக்கு வரவிருந்த 16 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. மொத்தம் 34 சர்வதேச விமானங்கள், நேற்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணியர் கடும் அவதிக்கு உள்ளாகினர். இவர்களுக்காக, சர்வதேச முனையம் 2ல் உதவி மையம் திறக்கப்பட்டது. இங்கு, விமானம் மாற்று ஏற்பாடு, பயணியருக்கு அடிப்படை வசதி செய்து தரப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ