உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காதல் விவகாரம் வாலிபரை கொன்ற 4 பேர் கைது

 காதல் விவகாரம் வாலிபரை கொன்ற 4 பேர் கைது

எலஹங்கா: பாகல்கோட் மாவட்டம் முதோலை சேர்ந்தவர் ரமேஷ், 25. இவர் தன் உறவினர் ஈரய்யா மகளான, 17 வயது சிறுமியை ஒரு தலையாக காதலித்தார், அவருக்கு தொந்தரவும் கொடுத்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், ரமேஷ் இரண்டு மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், பாதுகாப்பு காரணத்திற்காக மகளை, பெங்களூரு எலஹங்காவில் உள்ள உறவினர் வீட்டில், ஈரய்யா தங்க வைத்தார். கடந்த மாதம் ஜாமினில் வந்த ரமேஷ், பெங்களூரு வந்து சிறுமியை பின்தொடர்ந்து, மீண்டும் காதல் தொல்லை கொடுத்தார். கடந்த, 30ம் தேதி எலஹங்கா அல்லசந்திரா பகுதியில் ஓடும் சாக்கடை கால்வாய் அருகே ரமேஷ் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில் ரமேஷை கொலை செய்த ஈரய்யா உட்பட நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை