ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்
பெங்களூரு: கர்நாடகாவில் நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். நிர்வாக சீர்திருத்த ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிக்கமகளூரு மாவட்ட கலெக்டராக இருந்த நாகராஜ், கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சமூக அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஹர்ஷ் குப்தா, கர்நாடக மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராக பணி செய்வார். கலபுரகி மாவட்ட சி.இ.ஓ., பன்வர்சிங் மீனா, சிக்கமகளூரு கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப துறை இயக்குநராக பணி யாற்றிய ராகுல் சரணப்பா சங்கனுார், கலபுரகி மாவட்ட சி.இ.ஓ.,வாக இனி பணியாற்றுவார். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. சிக்கமகளூரு மாவட்ட கலெக்டராக, கடந்த பிப்ரவரி மாதம் தான் நாகராஜ் நியமிக்கப்பட்டார். நான்கு மாதத்தில் அவரை இடமாற்றம் செய்து இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.