உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / லாரி மீது அரசு பஸ் மோதியதில் குழந்தை உட்பட 4 பேர் பலி

லாரி மீது அரசு பஸ் மோதியதில் குழந்தை உட்பட 4 பேர் பலி

ஹொஸ்கோட்:லாரியுடன் ஆந்திர போக்குவரத்துக்கழக பஸ் மோதியதில் குழந்தை உட்பட, நால்வர் உயிரிழந்தனர்.ஆந்திர போக்குவரத்துக்கழக பஸ் ஒன்று, நேற்று அதிகாலை 2:00 மணியளவில், திருப்பதியில் இருந்து பெங்களூருக்கு வந்து கொண்டிருந்தது. பெங்களூரு ரூரல் மாவட்டம், ஹொஸ்கோட் தாலுகாவின், கொட்டிபுரா கேட் அருகில் வந்தபோது, துாக்க கலக்கத்தில் இருந்த பஸ் ஓட்டுநர், முன்னே சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றார்.வேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், லாரி மீது மோதியது. இதில், பஸ்சின் ஒரு பாதி நொறுங்கியது. பஸ்சில் பயணம் செய்த கேசவரெட்டி, 44, துளசி, 21, பிரணதி, 4, மற்றும் 11 வயது குழந்தை யதிக் ஆகியோர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஹொஸ்கோட் போக்குவரத்து போலீசார், உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !