மேலும் செய்திகள்
வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயம்
25-Oct-2025
பீதர்: ஓநாய் தாக்கியதில் பீதரின் இரு கிராமங்களை சேர்ந்த சிறுவன் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். பீதர் மாவட்டம், ஆலுார் (பி) கிராமத்தை சேர்ந்தவர்கள் ருக்மினி பாய், லாலம்மா ஆகியோர் தோட்டத்தில் நேற்று முன் தினம் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, உணவு தேடி வனப்பகுதியில் இருந்து கிராமத்துக்குள் நுழைந்த ஓநாய், அவர்கள் மீது பாய்ந்தது. இதில், அவர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்தனர். இதை பார்த்த ஓநாய், தலைதெறிக்க ஓடியது. அதுபோன்று, ஜிர்ஜா (பி) கிராமத்தை சேர்ந்த மங்களா, விவசாய பணி முடிந்து, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்றபோது, புதரில் இருந்து வந்த ஓநாய், அவர் மீது பாய்ந்து கடித்து குதறியது. அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த அவரது கணவர், ஓநாயை அடித்து விரட்டி, மனைவியை காப்பாற்றினார். கடைசியாக அன்று மாலையில், அதே கிராமத்தை சேர்ந்த ரேவப்பா பிரபு பம்புலகே, 15, என்ற சிறுவனை ஓநாய் தாக்கியது. படுகாயம் அடைந்த நான்கு பேரும், பீதர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
25-Oct-2025