உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கள்ளக்காதல் ஜோடிக்கு மொட்டை பெண்ணின் 4 உறவினர்கள் கைது

கள்ளக்காதல் ஜோடிக்கு மொட்டை பெண்ணின் 4 உறவினர்கள் கைது

ராம்நகர் : கள்ளக்காதல் ஜோடிக்கு மொட்டை அடித்த, பெண்ணின் உறவினர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெங்களூரு தெற்கு கனகபுரா டவுன் இந்திராநகரில் வசிப்பவர் மகேஷ், 35. இவருக்கும், ஹசீனா பானு, 33, என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது. நேற்று முன்தினம் இரவு இருவரும் பைக்கில் வெளியே சென்றனர். பின், வீட்டிற்கு திரும்பி வந்தனர். பைக்கை மறித்த ஹசீனா பானுவின் உறவினர்கள் நவாஸ், கபீர், சுயோல், நயாஸ் ஆகியோர், மகேஷிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். தடுக்க முயன்ற ஹசீனாவுக்கும் அடி விழுந்தது. 'நீங்கள் இருவரும் எப்படி கள்ளக்காதலில் ஈடுபடலாம்' என்று கேட்ட நான்கு பேரு ம், இருவரின் தலையையும் மொட்டை அடித்துவிட்டு தப்பினர். இருவரும் கொடுத்த தனித்தனி புகாரில் இரண்டு வழக்குகள் பதிவு செய்த போலீசார், நான்கு பேரையும் நேற்று கைது செய்த னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !