உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பள்ளத்தில் விழுந்ததில் 4 வயது குழந்தை பலி

பள்ளத்தில் விழுந்ததில் 4 வயது குழந்தை பலி

சிக்கபல்லாபூர்: திருமணமாகி 14 ஆண்டுகளுக்கு பின் பிறந்த ஆண் குழந்தை, வயலில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இறந்ததால், பெற்றோர் சோகத்தில் உறைந்தனர்.சிக்கபல்லாபூர், குடிபண்டே தாலுகா, ஹலேகுடிபண்டே கிராமத்தைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி - பாக்கியம்மா தம்பதி. இவர்களுக்கு திருமணம் ஆகி, 14 ஆண்டுகளுக்கு பிறகே ஆண் குழந்தை பிறந்தது. அர்பித் ரெட்டி, என பெயரிட்டு ஆசையாக வளர்த்து வந்தனர். இந்நிலையில், லகுமேனஹள்ளி எனும் பக்கத்து கிராமத்தில், கணவன், மனைவி இருவரும் விவசாயம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் நான்கு வயதாகும் தங்கள் மகன் அர்பித்தையும் அழைத்துச் சென்றிருந்தனர். குழந்தை இருப்பதை மறந்துவிட்டு, தம்பதி மும்முரமாக வேலை செய்து வந்தனர். இவ்வேளையில், வயலில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் குழந்தை தவறி விழுந்தது. பள்ளத்திலிருந்து வெளியே வர முடியாமல், பரிதவித்து இறந்து போனது.திடீரென குழந்தை ஞாபகம் வந்து தம்பதி தேடினர். பள்ளத்தில் இறந்த நிலையில் குழந்தை கிடப்பது தெரிந்தது. குழந்தையை அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். குடிபண்டே போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை