தெருநாய்கள் கடித்து 40 ஆடுகள் பலி
தங்கவயல்: பேத்தமங்களா அருகே உள்ள வீரசந்திரா கிராமத்தில் கொ ட்டகையில் இருந்த 40 ஆடுகளை, 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து கொன்றன. பேத்தமங்களா அருகே உள்ள வீரசந்திரா கிராமத்தில் கஸ்துாரியம்மா, 70. கிருஷ்ணப்பா, 73, தம்பதியர், தங்களுக்கு சொந்தமான கொட்டகையில், 80 செம்மறி ஆடுகளை கட்டி வைத்திருந்தனர். கடந்த வெள்ளியன்று இரவில் பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள், ஆடுகள் கடித்து குதறியுள்ளன. இதில், 40 ஆடுகள் இறந்து விட்டன. தகவல் அறிந்த கிராமத்தினர், ஆடுகளை இழந்த குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என, தங்கவயல் தாசில்தார் பாரத் -திடம் கோரிக்கை விடுத்தனர். 4 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வருவாய்த் துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர்.