உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 58 நாள் குழந்தையின் கால் விரல்கள் அழுகின

58 நாள் குழந்தையின் கால் விரல்கள் அழுகின

பெங்களூரு: பிரபலமான வாணி விலாஸ் மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியத்தால், 58 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையின் கால் விரல்கள் அழுகின. பெங்களூரின் வாணி விலாஸ் மருத்துவமனைக்கு, அக்டோபர் 15ம் தேதியன்று, காய்ச்சலால் அவதிப்பட்ட, 58 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை, சிகிச்சைக்காக பெற்றோர் எடுத்து வந்தனர். டாக்டர்களும் குழந்தையை பரிசோதித்து, மருந்து, மாத்திரைகள் கொடுத்தனர். அதன்பின், ‘ஐவி இன்ஜெக்ஷன்’ போட்டனர். சில மணி நேரங்களில், குழந்தையின் உடல் நிலை மோசமானது. குழந்தையின் கால் விரல்கள், நீல நிறத்துக்கு மாறி அழுக துவங்கியுள்ளன. டாக்டர்களின் அலட்சியம், தவறான சிகிச்சையே, குழந்தையின் நிலைக்கு காரணம் என, பெற்றோர் குற்றஞ்சாட்டினர். அதன் பின், டாக்டர்கள் அவசரமாக அறுவை சிகிச்சை செய்து, குழந்தையின் அழுகிய கால் விரல்களை, வெட்டி எடுத்தனர். வெறும் இரண்டு மாத குழந்தைக்கு, இந்த நிலை ஏற்பட்டதால், பெற்றோர் மனம் வருந்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை