6 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் 2 தமிழர்களுக்கு முக்கிய பொறுப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் 6 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தமிழ் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைத்துள்ளது. காத்திருப்போர் பட்டியலில் இருந்த அஞ்சும் பர்வேஸ், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் தலைமை செயலராக நியமனம். ஜி.பி.ஏ.,வின் நிர்வாகம், வருவாய், தகவல் தொழில்நுட்ப துறை சிறப்பு கமிஷனராக பணியாற்றிய முனிஷ் மவுத்கில், முதல்வரின் முதன்மை செயலராக நியமனம். நகர்ப்புற மேம்பாட்டு துறை செயலர் தீபா சோழன், போக்குவரத்து துறை செயலராக நியமனம். காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவேரி, நகர்ப்புற மேம்பாட்டு துறை செயலராக நியமனம். திட்டம், புள்ளியியல் துறை செயலர் வெங்கடேஷ், பெங்களூரு கூட்டுறவு சங்க பதிவாளராக நியமனம். கர்நாடக நகர பகுதி குடிநீ ர் வழங்கல் துறையின் நிர்வாக இயக்குநர் செல்வமணி, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனராக நியமனம். இவர்களில் தீபா சோழனும், செல்வமணியும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.