உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போதை விற்ற 6 பேர் கைது

போதை விற்ற 6 பேர் கைது

ஜாலஹள்ளி: பெங்களூரில் போதைப் பொருள் விற்ற இன்ஜினியரிங் பட்டதாரிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூரில், போதைப் பொருள் விற்று வந்த ஆறு பேரை நேற்று முன்தினம் இரவு ஜாலஹள்ளி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பர்ஹான் உசேன், 29, உபேஷ் பகதுார், 20, சன்மான் குரேஷி, 25, முகமது சோயப், 28, சந்தன், 24, உமர் சாகித், 26, என்பது தெரிய வந்தது. இவர்களில் முகமது சோயப், சந்தன், உமர் சாகித் ஆகிய மூன்று பேரும் நண்பர்கள்; இன்ஜினியரிங் பட்டதாரிகள். கல்லுாரியில் படிக்கும்போது போதை பழக்கத்திற்கு அடிமையாகினர். போதை மீதான மோகத்தால், போதைப் பொருள் விற்றது தெரிந்தது. இவர்களிடம் இருந்து 61 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6.20 கிலோ கஞ்சா, 278 கிராம் எம்.டி.எம்.ஏ., 75 கிராம் சரஸ், ஆயுதங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை