உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரில் கஞ்சா விற்பனை வடமாநிலத்தின் 6 பேர் கைது

பெங்களூரில் கஞ்சா விற்பனை வடமாநிலத்தின் 6 பேர் கைது

காட்டன்பேட் : பெங்களூரில் கஞ்சா விற்ற பீஹார், ராஜஸ்தான், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூரு காட்டன்பேட்டில் உள்ள கால்நடை மருத்துவமனை பகுதியில், கடந்த 12ம் தேதி இரவு போலீசார் ரோந்து சென்றனர். சரக்கு ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த, பீஹார் மாநிலத்தின் தீபக் குமார், 27, அமர்நாத், 61, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, கூட்டாளிகளான ராஜஸ்தானின் சங்கர் லால், 36, ஒடிசாவின் அனிருத் தலாய், 38, ஜார்க்கண்ட்டின் பசந்த் குமார், 35, அஜித் சிங், 43, ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான 53.50 கிலோ கஞ்சா, ஒன்பது மொபைல் போன்கள், பத்து சிம் கார்டுகள், ஒரு மடிக்கணினி, ஒரு சரக்கு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 6 பேரும் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில், பஸ் மூலம் பெங்களூருக்கு, கஞ்சா கடத்தி வந்து விற்றுள்ளனர். இங்கிருந்து டில்லி, புனே, ஐதராபாத்திற்கு கஞ்சாவை கடத்திச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மற்ற மாநில போலீசாருக்கும் பெங்களூரு போலீசார் தகவல் கொடுத்து உள்ளனர். கைதான 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை