உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 6 மூத்த எம்.எல்.ஏ.,க்கள் காதருக்கு மாற்றாக தேர்வு

6 மூத்த எம்.எல்.ஏ.,க்கள் காதருக்கு மாற்றாக தேர்வு

பெங்களூரு:சபாநாயகர் காதர் இல்லாத நேரத்தில், சட்டசபையை நடத்த மூன்று கட்சிகளில் இருந்தும், ஆறு மூத்த எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆண்டிற்கு நான்கு முறை சட்டசபை கூடுகிறது. சபையின் நடவடிக்கைகள் சபாநாயகர் காதர் முன்னிலையில் நடக்கிறது. சபாநாயகர் ஓய்வுக்கு செல்லும் போதோ அல்லது அவரால் சபைக்கு வர முடியாத சூழ்நிலையிலோ, துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி சட்டசபை நடவடிக்கையை கவனிக்கிறார். கடந்த மார்ச் மாதம் சட்டசபை கூட்டத்தொடர் நடந்தபோது, துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி விபத்தில் சிக்கினார். காதர் ஓய்வுக்கு சென்றபோது, தீர்த்தஹள்ளி பா.ஜ., - எம்.எல்.ஏ., அரக ஞானேந்திரா, பைலஹொங்கலா காங்கிரஸ் எம்.எல்.ஏ., மகாந்தேஷ் கவுஜலகி ஆகியோர், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை வழிநடத்தினர். இந்நிலையில், தான் இல்லாத நேரத்தில், சட்டசபையை நடவடிக்கைகளை கண்காணிக்க, ஆறு மூத்த எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் காதர் நியமித்துள்ளார். காங்கிரசின் முத்தேபிஹால் எம்.எல்.ஏ., சி.எஸ்.நாடகவுடா, நரசிம்மராஜா எம்.எல்.ஏ., தன்வீர் செய்ட், ஆலந்த் பி.ஆர்.பாட்டீல், ஹுப்பள்ளி -தார்வாட் சென்ட்ரல் பிரசாத் அப்பய்யா, பா.ஜ.,வின் தீர்த்தஹள்ளி எம்.எல்.ஏ., அரக ஞானேந்திரா, ம.ஜ.த.,வின் துருவகெரே எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா ஆகிய ஆறு பேரையும் நியமிக்க சபாநாயகர் பரிந்துரை செய்துள்ளார். இதற்கான உத்தரவை சட்டசபை செயலர் விசாலாட்சி பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி