பெங்களூரின் 7 மாணவ - மாணவியர் 625 மதிப்பெண் எடுத்து சாதனை
பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் பெங்களூரு, பெங்களூரு ரூரலை சேர்ந்த 7 மாணவ - மாணவியர் 625 க்கு 625 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்து உள்ளனர்.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 22 மாணவ, மாணவியர் 625 க்கு 625 மதிப்பெண் எடுத்து, முதலிடம் பிடித்தனர். இவர்களில் பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி தாலுகா விஜயபுராவில் உள்ள நீலகிரிஸ்வரா வித்யாநிகேதன் உயர் நிலைப்பள்ளி பாவனா; பெங்களூரு கெம்பேகவுடா நகர் யாஷ் உயர் நிலைப்பள்ளி மாணவி தனலட்சுமி; பெங்களூரு கிரிநகர் விஜயபாரதி வித்யா உயர் நிலைப்பள்ளி மாணவி ஜானவி; மல்லேஸ்வரம் கிஷோர் கேந்திரா உயர் நிலைப்பள்ளி மாணவர் மதுசூதன் ராஜு; கல்யாண் நகர் மம்தா பள்ளி மாணவி நமிதா; பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் சந்திரசேகரநாத் சுவாமி பள்ளி மாணவி ரஞ்சிதா; அசோக் நகர் ஹோலி சைல்ட் ஆங்கில உயர்நிலைப்பள்ளி மாணவி யுக்தா ஆகியோரும் அடங்குவர்.