உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  70 வயது மூதாட்டி பலாத்காரம்; கொலை

 70 வயது மூதாட்டி பலாத்காரம்; கொலை

கோலார்: பசுக்களுக்கு தீவனம் கொண்டு வர, வயலுக்கு சென்ற 70 வயது மூதாட்டியை, மர்ம நபர் பாலியல் பலாத்காரம் செய்து, கொன்றது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கோலார் மாவட்டத்தின், சாரகனஹள்ளி கிராமத்தில், 70 வயது மூதாட்டி வசித்து வந்தார். இவர் தினமும் கிராமத்தின் அருகில் உள்ள வயலுக்கு சென்று, பசுக்களுக்கு புல் கொண்டு வருவார். நேற்று முன் தினம் மதியம் புல் கொண்டு வருவதாக, குடும்பத்தினரிடம் கூறிவிட்டு வயலுக்கு சென்றார். வயலில் தனியாக இருந்த மூதாட்டியை கவனித்த மர்ம நபர், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தார். அவரை உயிரோடு விட்டால், தன்னை காட்டி கொடுப்பார் என்ற அச்சத்தில், அவரை தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை அங்கேயே வீசி விட்டு தப்பியோடி விட்டார். பசுக்களுக்கு தீவனம் கொண்டு வர, வயலுக்கு சென்றவர் இரவாகியும் வீடு திரும்பாததால், பீதியடைந்த குடும்பத்தினர் வயலுக்கு தேடி சென்ற போது, பலாத்காரத்துக்கு ஆளாகி, மூதாட்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அங்கு வந்த வேமகல் போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு, கொலையாளியை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !