உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போதையில் வாகனம் ஓட்டிய 744 பேர் மீது வழக்கு பதிவு

போதையில் வாகனம் ஓட்டிய 744 பேர் மீது வழக்கு பதிவு

பெங்களூரு: பெங்களூரில், மது போதையில் வாகனம் ஓட்டிய 744 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெங்களூரில் உள்ள 53 போக்குவரத்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 16ம் தேதி முதல், 22ம் தேதி வரை போக்குவரத்து போலீசார் சிறப்பு சோதனை நடத்தினர். மது போதையில் வாகனம் ஓட்டுவோர், சாலையில் அதிவேமாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் சிறப்பு சோதனை நடந்தது. மொத்தம் 42 ஆயிரத்து 68 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. இதில், மது போதையில் வாகனம் ஓட்டிய 744 பேர், அதிவேகமாக சென்றது தொடர்பாக 239 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவர்களிடம் இருந்து 2.42 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !